ETV Bharat / briefs

ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கரூர்: பொது முடக்கத்தின்போது பல இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Gambling Arrested In Karur
Gambling Arrested In Karur
author img

By

Published : Jul 6, 2020, 6:02 PM IST

கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கம்பட்டி அருகேயுள்ள குதிரைக்காரன் களம் என்ற பகுதியில் ராமகிருஷ்ணன் (59), தனபால் (59), லோகநாதன் (37) வெங்கடேசன் (36), ஆகியோர் சீட்டுக்கட்டு வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல் துறை ஆய்வாளர் சூர்யா, அவர்களிடமிருந்து ரூ.18 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதேபோல், கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாடிய மூன்று பேரிடமிருந்து 200 ரூபாயும், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாடிய நான்கு பேரிடமிருந்து 2,900 ரூபாயும் காவல் துறையினர் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

பொது முடக்கத்தின்போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என காவல் துறை சார்பில் வலியுறுத்தியும், அதனை மீறும் வகையில், இதுபோன்று சூதாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.