கடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் மூட மறுத்தனர் என்ற காரணத்திற்காக சாத்தான்குளம் காவல் துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்ரு, “நீதித்துறை ஒழுங்கின்மை, கைது நடவடிக்கைக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியது, வழக்கை தவறாக வழிநடத்தியிருப்பது” ஆகியவற்றிற்காக, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் பி.சரவணன் பதவீ நீக்கம் செய்யப்பட வேண்டும்.
ஜெயராஜ், இம்மானுவல் பென்னிக்ஸ் ஆகியோர், காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற விதிமுறைகளை ஏளனம் செய்வதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்.எல்.சி மேலாளர் பணியிடை நீக்கம்