ETV Bharat / briefs

முன்விரோதத்தால் ஆட்டோ ஓட்டுநர் கொலை: 5 பேர் கைது! - Auto Driver Murder

திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Five Person Arrested For Driver Murder In Thiruvallur

author img

By

Published : Sep 8, 2020, 9:26 PM IST

திருவள்ளூர் மாவட்டம், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் மாதவன்(20). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று கொளுத்துவான்சேரி சுடுகாடு அருகே காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.‌ அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.8) உயிரிழந்தார்.

இது குறித்து மாங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த சூர்யா(19), சரவணன்(29), ராஜேஷ்(24), உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், மாதவன், சூர்யாவின் வாகனங்கள் மோதிக்கொண்டதில் சூர்யாவை மாதவன் தாக்கி உள்ளார்.

மேலும் ஏரியாவில் யார் பெரிய ஆள் என்ற மோதலும் இருந்து வந்த நிலையில் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்ததும், நேற்று மாதவனை அழைத்து சென்று மது அருந்த வைத்து விட்டு சூர்யா தரப்பினர் சரமாரியாக தாக்கியதில், மாதவன் மயங்கியதால் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதனால், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.