ETV Bharat / briefs

'போலி இ-பாஸ் மூலம் மாவட்டத்திற்குள் நுழைந்தால் வழக்குப்பதிவு' - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Jun 17, 2020, 7:53 PM IST

திருப்பத்தூர்: வெளி மாவட்டங்களில் இருந்து போலியான இ-பாஸ் மூலம் மாவட்டத்திற்குள் நுழைந்தால், வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

போலியான இ பாஸ் மூலம்மாவட்டத்திற்குள் நுழைந்தால் வழக்குபதிவு - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வருவாய்த்துறை, காவல் துறை, ஊரகத் துறை என அனைத்துத் துறை அதிகாரிகள் தலைமையில், கூடுதலாக ஊழியர்களை நியமித்து, தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனத்தையும் தீவிர சோதனை செய்து, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். பாஸ் இல்லாமல் நுழைபவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன்17) மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, 6 சோதனைச் சாவடிகளையும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், 'இ-பாஸ் இல்லாமல் சிலர் மாவட்ட எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறை, வருவாய்த்துறை என கூடுதலாக ஊழியர்களை நியமித்து அவர்கள் மூலம் கண்காணிப்புப் பலப்படுத்தபட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைக்குள் நுழைபவர்களை திருப்பி அனுப்புகிறோம்.

இந்த மாவட்டத்தில் 48 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், குறிப்பாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்களிடம் இருந்து தொற்று கண்டறியப்பட்டுள்ளது' என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.