ETV Bharat / briefs

10 அடி நீளம் உள்ள ராஜநாகம் வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் 10 அடி நீளம் உள்ள ராஜநாகம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Excitement as the 10-foot King Cobra entered the house near srivilliputtur

author img

By

Published : Aug 27, 2020, 6:14 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத் தோப்பு பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், கொடிய விஷமுள்ள ராஜநாகங்கள், மிகப்பெரிய அளவிலான மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், 10 அடி நீளம் உள்ள ராஜநாகம் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்தது.

இதைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தொடர்ந்து, நாகப்பாம்பு எங்கும் தப்பிவிடாதபடி வீட்டின் கதவை பூட்டி வைத்தனர். இது குறித்து வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ராஜநாகத்தைப் பிடித்து செண்பகத் தோப்பு பகுதியில் அடர்த்தியான வனப்பகுதிக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.