பிரான்ஸ்: இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பை முன்கூட்டியே கண்டறிய செயலி உதவுகிறது.
நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் நோய் அற்றவர்கள் ஆகிய இருவரின் குரல் மாதிரிகளை எடுத்து, செயலி மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வெற்றிக் கண்டுள்ளனர். இதயம் செயலிழந்த 40 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், மனிதனின் குரல் மாதிரிகளை 30 வினாடிகள் சேகரித்து அதை கணித்து நுரையீரல் செயல்பாடுகளை செயலிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று ஸ்ரேல் ஜெருசலேமின் ஹடாஸா மருத்துவ மையத்தின் இதய பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஆஃபர் அமீர் தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே இதய செயலிழப்பு நோயாளிகளைக் கண்காணிக்க இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். நோயாளிகள் செயலியை பதிவிறக்கம் செய்து தங்களின் குரல் மாதிரிகளை அதில் சமர்ப்பிக்க வேண்டும். ஆரோக்கியமான குரல்களும், நோயுற்ற நேரத்தில் உள்ள குரல்களும் கணக்கிடப்பட்டு மருத்துவர்களுக்கு நோயாளிகள் குறித்து முன்னதாகவே தகவல்களை இச்செயலிகள் அனுப்பும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கரோனா காலங்களில் நோயாளிகள் மருத்துவமனைக்கு அதிகம் செல்வதை தவிர்க்கும் விதமாக இதுபோன்ற புதிய படைப்புகள் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் என்று அவர் கூறினார்.