ETV Bharat / briefs

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி - ஆட்சியர் தொடக்கி வைப்பு! - ஈரோட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஈரோடு: வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயத்தை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடக்கி வைத்தார்.

Jamapandi - Erode District Collectorate of Revenue Villages
ஈரோடு ஜமாபந்தி தொடக்கம்
author img

By

Published : Jul 8, 2020, 7:07 AM IST

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அப்போது, வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவை தீர்த்து வைக்கப்படுவதுடன், கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்படுவது வழக்கம்.

அதன்படி, மாநிலம் முழுவதுமுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று (ஜூலை 7) தொடங்கியது. ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயத்தை ஆட்சியர் சி.கதிரவன் தொடக்கிவைத்தார்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள ஜமாபந்தியில் வருவாய் கிராமங்களின் வருவாய் தொடர்பான கணக்குகள் மட்டும் சரிபார்க்கப்படும். வழக்கமாக ஜமாபந்தியில் மனுக்களை வழங்கி தீர்வு காணும் பொதுமக்கள், கரோனா பரவல் காரணமாக கூட்டமாக நேரில் வந்து தங்களது மனுக்களை வழங்கி தீர்வு காண்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வட்டாட்சியர் அலுவலக இணையதள முகவரிக்கு வரும் 15ஆம் தேதி வரை தங்களது மனுக்களை விண்ணப்பித்து அதற்கான தீர்வுகளை காணலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.