மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை எதிர்த்து டி.ஒய்.எஃப்.ஐ., சி.எஃப்.ஐ. அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
ஏழை, எளிய மக்கள் நீட் தேர்வுக்காகப் பயிற்சி மையங்களில் சேர முடியாத நிலை உள்ளது. இதனால், பல்வேறு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோகிறது. எனவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.