ETV Bharat / briefs

கள்ளக்குறிச்சி காப்புக் காட்டில் எலும்புக்கூடு கண்டெடுப்பு - மக்கள் அதிர்ச்சி! - எலும்புக்கூடு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி :மலைக்கோட்டாலம் காப்புக் காட்டில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி காப்புக் காட்டில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு - மக்கள் அதிர்ச்சி !

author img

By

Published : Jul 19, 2020, 12:31 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்துள்ள மலைக்கோட்டாலம் என்ற கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது.

இந்த காப்புக் காட்டில் மான்குன்று என்ற இடத்தில் எலும்புக்கூடு ஒன்று பாறை குன்றுகளுக்கு இடையே கிடந்ததுள்ளது.

நேற்று அந்த வழியே ஆய்வு செய்ய சென்ற வனக்காப்பாளர் நெல்சன் மண்டேலா என்பவர் இதை கண்டு அருகிலுள்ள வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் எலும்புக்கூடு கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, விழுப்புரம் தடயவியல் வல்லுநர் சண்முகம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் அந்த எலும்புக்கூடு தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது.

சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் எலும்புக்கூட்டில் ஒரு கை உள்ளிட்ட சில எலும்புகள் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை வனவிலங்குகள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் எலும்புக்கூட்டை கைப்பற்றிய காவல் துறையினர் அவற்றை ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இறந்த அந்தப் பெண் காப்புக்காட்டுக்கு உட்புறமாக வந்து விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வரஞ்சரம் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.