மத்திய அரசு அண்மையில் மக்களவையில் நிறைவேற்றிய வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் பழைய தர்மபுரி ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, வேளாண் சட்டத் திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், உடனடியாக அதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.