ETV Bharat / briefs

அடிப்படை வசதிகளை செய்து தர அரசு மறுக்கிறது: திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றச்சாட்டு - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: எதிர்க்கட்சி என்பதற்காக தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர அரசு மறுப்பதாக அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர  அரசு மறுப்பதாக அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 21, 2020, 4:19 PM IST

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த "எல்லோரும் நம்முடன்" என்ற திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் , கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை திமுக மாவட்ட செயலாளர், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் , வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் "எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தில் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,300 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 50 பேர் வீதம் 75 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 1,979 திமுக உட்பிரிவு அமைப்பு கிளைகள் இருந்தாலும் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கு இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி இளைஞர்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைவார்கள்.

பிஞ்ச மந்தையில் துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் 2 ஏக்கர் நிலம் ஒதுக்காததால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர அரசு மறுக்கிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.