ETV Bharat / briefs

CWC19: மழைக்கு கிடைத்த நான்காவது வெற்றி, இந்தியா - நியூசிலாந்து போட்டி ஸ்வாஹா

author img

By

Published : Jun 13, 2019, 7:54 PM IST

நாட்டிங்ஹாம்: மழையின் காரணமாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது.

இந்தியா - நியூசிலாந்து போட்டி ரத்து

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 18ஆவது லீக் போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால், ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால், போட்டி நடைபெறுமா என்று நடுவர்களால் நான்குமுறை மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு முறையும் மழை நின்றும், பெய்தும் நடுவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களின் பொறுமையையும் சோதித்தது.

Ind vs NZ
ஆடுகளத்தில் ஆய்வு மேற்கொண்டு நடுவர்கள்

இறுதியில், மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டிக்கு முடிவு கிடைக்காததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதன் மூலம், இந்தத் தொடரில் நான்கு போட்டிகள் மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

CWC19 - Ind vs NZ match Abandoned  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.