கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை, கைது செய்யவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா செயலாளர்கள் மகாலிங்கம், துரைசாமி, சேதுராமன், கோவை மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பரமசிவம், மோகன், பெரியசாமி , மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!