ETV Bharat / briefs

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பசு உயிரிழப்பு! - Cow Dead By Electricity Attack in Kanniyakumari

கன்னியாகுமரி: டிரான்ஸ்பார்மில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழந்தது.

Cow Dead By  Electricity Attack in Kanniyakumari

author img

By

Published : Jun 7, 2020, 7:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (68). விவசாயியான இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுக்கள் கிராமத்தின் சாலையோரம் உள்ள தோட்டத்தில் புல் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது, சாலையோரத்தில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், கம்பி முழுவதும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது.

அதன் அருகே புல் மேய்ந்துக் கொண்டிருந்த பசு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த மின்சார ஊழியர்கள், டிராஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

மேலும், சரியான நேரத்தில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழந்ததை பொதுமக்கள் கண்டு பிடித்ததால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதனிடையே, சில தினங்களில் கன்று ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த பசு உயிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.