ETV Bharat / briefs

காவல்துறை கண்டுக்கொள்ளாததால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 14, 2020, 7:44 PM IST

திருவாரூர்: பருத்தியை விற்பனை செய்வதற்காக காத்திருந்த வாகனங்களை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Cotton Farmers Lorry Traffic Jam in Thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.

இந்நிலையில், விவசாயிகள் எடுக்கும் பருத்தியை விற்பனை செய்வதற்கு மாவட்டம் முழுவதும் நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன.

திருவாரூரில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் எடுக்கப்படும்.

இதனால், நேற்று (ஜூலை) காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பருத்தி விற்பனை செய்வதற்காக விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

குறிப்பாக திருவாரூர் மூங்கில்குடியில் அருகே சாலையின் ஓரத்தில் சுமார் 4 கி.மீ தூரம் வரை பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மூங்கில்குடி அருகேயுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் பருத்தி ஏலம் எடுக்கப்படுவது தெரிந்தும் நன்னிலம் காவல்துறையினரும், போக்குவரத்து காவல்துறையினரும் பாதுகாப்பு பணிக்கு வராததால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டதாக வாகன ஓட்டிகள், பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: 'கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி' - அமைச்சர் விஜய பாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.