உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்று மனிதர்களிடமிருந்து பிறருக்கு எளிதில் பரவுகிறது என்பதால், உலக சுகாதார மையம் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் சுகாதார அமைப்புகளும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே முகக்கவசங்கள், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல், கையுறை அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
நோய்த் தொற்றுள்ள பிறர் நம்மை தொடும்போதும், அவர்கள் இருமும் போதும், தும்மும்போதும் தொற்று எளிதில் பரவுகின்றன. இவை தவிர தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய பொருள்களை தொடுவதாலும் கரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்கிறது என்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இது தவிர வேறு எந்த வழிகளில் தொற்று பரவும் என்று தேடல்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதக் கழிவுகள் மூலம் பரவுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், "பொதுவாக தொற்று ஏற்படாதபடி பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது சிறந்தது. தொற்று கிருமிகள் மூக்கின் வழியாக நுரையீரலை எளிதில் சென்றடைந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதிலிருந்து மீள அவரவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார்.
மனிதக் கழிவுகள் மூலம் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதா என அறிந்துகொள்ள சென்னை குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் அலுவலர்களிடம் கேட்டபோது, அதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மனிதக் கழிவுகளில் வைரஸின் எச்சங்கள் காணப்படுகின்றன.
ஆனால், அது இறந்த கழிவுகள் போன்றதாகும் என்பதால் கழிவுகள் மூலம் தொற்று பரவும் என்பது சரியானதல்ல, ஏனென்றால் மனிதனின் வயிற்று பகுதியில் சுரக்கும் ஆசிட் வகை எந்த தொற்று கிருமிகளையும் அழிக்கும் வல்லமை கொண்டவை என்பதால் தொற்று கிருமிகள் நுரையீரல் பகுதிக்குள் சென்றுவிடும் போது தான் பாதிப்புகள் ஏற்படுகிறது" எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரை விமர்சிக்க ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் உதயகுமார்