ETV Bharat / briefs

மரண பீதியில் மதுரை : ஒரே நாளில் 284 பேருக்கு கரோனா பாதிப்பு! - மதுரை கோவிட்-19 பாதிப்பு

மதுரை : மதுரையில் இன்று (ஜூன் 28) ஒரே நாளில் 284 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மரண பீதியில் மதுரை : ஒரேநாளில் 284 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு !

author img

By

Published : Jun 28, 2020, 10:31 PM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 284 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் 1995 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இவர்களில் 25 பேர் உயிரிழந்தும், 591 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 379 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோயாளிகள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மதுரையில் கரோனா வைரஸ் தொற்றுநோய் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரத் துறை ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தன்னார்வ பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறிய முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்ட பின்னர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களால் கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் கரோனா பாதிப்பு மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.