ETV Bharat / briefs

கடலூரில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! - கடலூரில் 10ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

கடலூர்: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடலூரில் 10 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது.

Corona infection exceeding 10 thousand in Cuddalore

author img

By

Published : Aug 29, 2020, 1:06 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். மேலும் மருத்துவம் தொடர்பான ஏதேனும் சந்தேகமிருந்தால் மாவட்ட நிர்வாகத்தைக் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் 10 ‌ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 258 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை 334 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டாயிரத்தை 602 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் ஏழாயிரத்து 60 பேர் பூரண குணமடைந்து ஆன நிலையில் நேற்று 280 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை 340 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 107 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.