ETV Bharat / briefs

தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி: வருவாய் கோட்டாட்சியர் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

கோட்டாட்சியர் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Jun 28, 2020, 3:13 PM IST

தருமபுரி மாவட்டத்தில் அரூர், தருமபுரி என இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. தருமபுரி வருவாய் கோட்டத்திற்குள்பட்ட தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன.

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

மேலும் அவருடன் பணியாற்றும் அலுவலர்கள் அவர்களது வீடுகளிலேயே ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏழு நாள்களுக்கு பிறகு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கின்றனர்.

நேற்று தருமபுரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் சந்தோஷ் பாபு தலைமையில் பல்வேறு ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த கோட்டாட்சியருடன், அவரது உதவியாளரும் வந்திருந்ததால், அலுவலர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.