புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் இன்று ஆயிரத்து 315 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 397 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், புதுவையில் 345 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாம் 46 பேர் என மொத்தம் 397 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதே போல், இன்று 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.6 விழுக்காடாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 15 ஆயிரத்து 157 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் புதுச்சேரியில் 274, காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 16 பேர் என மொத்தம் 293 பேர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.