ETV Bharat / briefs

திருவள்ளூரில் 8 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு!

திருவள்ளூர்: இதுவரை எட்டு ஆயிரத்து 107 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Affect exceeds 8,000 in Thiruvallur

author img

By

Published : Jul 16, 2020, 10:45 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு ஆயிரத்து 107 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்து 785 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனை, வீடுகளில் மூன்று ஆயிரத்து 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் ஏழு பேர் வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 526 பேருக்கு நோய் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சி திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி பகுதிகளில் அதிகபட்சமாக 76 பேருக்கும், திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் சோழவரம் 45, வில்லிவாக்கம் 34, எல்லாபுரம், கடம்பத்தூர், திருவாலங்காடு, புழல், பெரியபாளையம், பூண்டி ஆகிய ஒன்றியங்களில் 56 பேருக்கும் திருமழிசை, ஊத்துக்கோட்டை, திருநின்றவூர் ஆகிய பேரூராட்சிகளில் என மொத்தம் 526 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "திருவள்ளூர் சுற்றியுள்ள அனேக ஒன்றியங்களில் கரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் தொடர்ந்து தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருத்தெருவாக சென்று குழுக்கள் அமைத்து அவர்கள் மூலமாக இருமல், சளி ஆகியவை இருந்தால் உடனடியாக அவர்கள் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்கள் தூய்மைப் பணியாளர்களை கொண்டு தூய்மை படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாதவாறு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 26 வாகனங்கள் பரிசோதனை செய்வதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கவரிங் நகையை தங்க நகை என நினைத்து திருடி ஏமாந்து போன திருடன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.