கரோனா வைரஸ் சென்னையில் அதிதீவிரமாக பரவிவருகிறது. அதனை தடுக்க மாநகராட்சி முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து, மக்களை பரிசோதனை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மட்டும் 539 மருத்துவ முகாம் 15 மண்டலங்களில் நடைபெற்றது. நேற்று 532 மருத்துவ முகாம்கள் மட்டுமே நடைபெற்றது. நோய் பரவல் அதிகமாக இருப்பதால் சென்னை மாநகராட்சி, மருத்துவ முகாம்களை அதிகரித்துள்ளது.
இன்று நடைபெற்ற 539 மருத்துவ முகாம்களில் மொத்தம் 38 ஆயிரத்து 660 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 2,131 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு கொண்டு சென்றனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் 62 மருத்துவ முகாம்களும், அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 53 மருத்துவ முகாம்களும், திருவிக நகரில் 51 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
தனக்காக ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க:நாகையில் மேலும் 62 நபர்களுக்கு கரோனா தொற்று...!