ETV Bharat / briefs

கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - Construction of marine sand erosion barrier District Collector's Survey

ராமநாதபுரம்: குந்துகால் பகுதியில் கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Construction of marine sand erosion barrier District Collector's Survey

author img

By

Published : Jul 5, 2020, 4:58 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, " தமிழ்நாடு அரசு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இம்மீன்பிடி இறங்கு தளமானது சுமார் 500 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைத்திட ஏதுவாக குளிர்பதன சேமிப்புக் கிடங்கு வசதிகள், சாலை வசதி, மீன் ஏலக்கூட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. விரைவில் 100 விழுக்காட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டு மீனவர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

மேலும், மீன்பிடி இறங்குதளம் அமைப்பதனால், இப்பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் சுமார் 400 மீ. நீளத்திற்கு புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ரூ.1.87 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.