ETV Bharat / briefs

சத்தீஸ்கரில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு! - பாலியல் வன்புணர்வு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் எட்டு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து தூக்கி வீசிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gang rape in chattishgarh
Gang rape in chattishgarh
author img

By

Published : Jun 4, 2020, 1:55 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பெமேத்ரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் எட்டு வயது சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த கும்பல் ஒன்று அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சாலையில் தூக்கி வீசிச் சென்றது.

சாலையோரத்தில் அலங்கோலமாக காயங்களுடன் இருந்த சிறுமியைக் கண்ட வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்வாங் பட்டேல் மருத்துவமனைக்கு விரைந்துவந்து ‌விசாரணை மேற்கொண்டார்.

சத்தீஸ்கர் உள் துறை அமைச்சர் தமரத்வாஜ் சாஹு காவல் கண்காணிப்பாளர் திவ்வாங் பட்டேலைத் தொடர்புகொண்டு குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் இது தொடர்பாக சட்டப்பிரிவுகள் 363, 323, போக்சோ உள்ளிட்டவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண் குழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பாகப் புகார் அளிக்க: 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.