சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் 1995ஆம் ஆண்டு முதல் கன ரக வாகனங்கள் இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது 2020-வது ஆண்டு முதல் அங்கு கார், மினி வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் எடுத்துத்தரப்படுகிறது.
தகுதி பெற்ற பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது, பெண்களுக்குப் பெண்கள் பயிற்சியாளர் மூலம் அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், மைதானப் பயிற்சி, பாலத்தில் ஏறி இறங்குதல், பின்னோக்கி செல்லுதல் உள்ளிட்ட அனைத்துவிதமான பயிற்சிகளும் வழங்கப்படுவதாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.