ETV Bharat / briefs

ஆம்பூர் கார் விபத்தில் மூவர் உயிர் தப்பிப்பு - திருப்பத்தூர் கார் விபத்து

திருப்பத்தூர்: மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை‌ திருப்பியதால் கார் கட்டுப்பாட்டை‌ இழந்து சாலையின் தடுப்பு வேலியின் மீது மோதி தலைக்கீழாக கவிழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமின்றி தப்பித்தனர்.

Car Accident In Tirupattur
Car Accident In Tirupattur
author img

By

Published : Sep 14, 2020, 12:55 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, வேலூரிலிருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார்.

இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு வேலிகள் மீது மோதி தலைகீழாக கவிந்து விபத்துக்குள்ளானது,

அதில், காரில் பயணம் செய்த இரண்டு ஆண்கள், ஓர் பெண் உட்பட மூன்று பேர் காயம் ஏதுமின்றி உயிர்த்தப்பினர்.

மேலும் விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.