ETV Bharat / briefs

இடைத்தேர்தலில் தம்பியை வீழ்த்திய அண்ணன் - அதிமுக வேட்பாளருமான லோகிராசனை

தேனி: ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது இளைய சகோதரரும் அதிமுக வேட்பாளருமான லோகிராஜனை வீழ்த்தினார்.

இடைத்தேர்தல் தம்பியை வீழ்த்திய அண்ணன்
author img

By

Published : May 24, 2019, 9:49 AM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில், முதலில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்றது.

இடைத்தேர்தல் தம்பியை வீழ்த்திய அண்ணன்

இதில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உடன்பிறந்த சகோதரர்கள் நேருக்கு நேர் போட்டியிட்டனர். அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளராகவும், தம்பி லோகிராஜன் அதிமுக வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில், அண்ணன் தம்பிக்குள் கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பின் திமுக வேட்பாளர் மகாராஜன் 12 ஆயிரத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தம்பியும், அதிமுக வேட்பாளருமான லோகிராஜனை வீழ்த்தி சட்டப்பேரவையில் காலடி எடுத்துவைக்கவுள்ளார்.

இதன் மூலம், அண்ணன் தம்பிக்குள் நடந்த அரசியல் போட்டியில், அண்ணனே வெற்றிபெற்றார். இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணகி இத்தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளர் மகாராஜனிடம் வழங்கினார்.

Intro:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் 12 ஆயிரத்து 323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தேர்தல் அலுவலர் கண்ணகியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர் மகாராஜன் பெற்றுக்கொண்டார்

Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி (198) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு நிறைவுற்றுது. 23 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதல் 5சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார்.
அதன் பின்னர் 6வது சுற்று தொடக்கத்திலிருந்து இறுதிவரை திமுக வேட்பாளர் மகாராஜனை முன்னிலை வகித்தார். இறுதியாக அதிமுக வேட்பாளர் லோகிராஜனை 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்தார்.

தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2,03,892
பதிவான வாக்குகள் - 201344
தபால் வாக்குகள் - 1998
நிராகரிக்கப்பட்டவை - 259

திமுக -மகாராஜன் - 87079
அதிமுக -லோகிராஜன் - 74756
அமமுக - ஜெயக்குமார் - 28313
நாம் தமிழர் - அருணா தேவி - 5180
சுயேட்சை - (மநீமஆதரவு)- அழகர்சாமி - 2408
நோட்டோ - 2246.

Conclusion:பேட்டி : மகாராஜன் - திமுக வேட்பாளர், ஆண்டிபட்டி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.