ETV Bharat / briefs

எனக்கு பந்துவீச பவுலர்கள் பயப்படுவார்கள் - கெயில் - WorldCup One day Cricket

தனக்கு பந்துவீச பவுலர்கள் அச்சம் கொள்வார்கள் ஆனால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் தெரிவித்துள்ளார்.

எனக்கு பந்துவீச பவுலர்கள் பயப்படுவார்கள் - கெயில்
author img

By

Published : May 23, 2019, 7:56 AM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

"என்னைப் பார்த்து பயப்படுவார்களா என்ற கேள்வியை கேமராவிற்கு முன் எதிரணியின் பந்துவீச்சாளர்களிடம் கேட்டால் இல்லை என்றுதான் முதலில் கூறுவார்கள். ஆனால், இதே கேள்வியை அவர்களிடம் கேமரா இல்லாத சமயத்தில் (சகஜமாக) கேட்டால், ஆம் நிச்சயம் அவரை பார்த்து பயப்படுவேன் என ஒப்புக்கொள்வார்கள். பவுலர்களின் பந்துவீச்சில் ரன் அடிப்பது சற்று சவால் நிறைந்ததுதான். ஆனால், அந்த சவால் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் அவர் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்துவருகிறார். பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினாலும் நின்ற இடத்தில் இருந்தே சிக்சரை பறக்கவிடுவார்.

தனது அதிரடி பேட்டிங் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால், இந்தத் தொடரில் கெயிலின் சிக்சர் மழை பொழியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.