ETV Bharat / briefs

கட்சிக்கு ஆள்சேர்க்கும் நோக்கில் கோவிட் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட பாஜக! - BJP ignored covid-19 restrictions in party function

சேலம் : பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் முருகன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்.

கட்சிக்கு ஆள்சேர்க்கும் நோக்கில் கோவிட் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட பாஜக
BJP ignored covid-19 restrictions in party function
author img

By

Published : Jun 16, 2020, 6:51 PM IST

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாற்று கட்சியிலிருந்து விலகியோர் பாஜகவில் இணையும் விழா இன்று (ஜூன் 16) நடைபெற்றது.

பாஜகவில் இணைவதற்காக வந்தவர்களை மாநில தலைவர் முருகன் சால்வை அணிவித்து, பாஜக உறுப்பினர் அட்டை வழங்கி கட்சியில் இணைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கோவிட்-19 பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்த எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்காமல் அதிக அளவில் மக்கள் ஒன்று கூடி இருந்ததையும், இதனை பாஜகவினர் கண்டுகொள்ளாமல் கட்சியில் இணைக்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்னதாக, மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், சிவராம்ஜி ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.