ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், 2019ஆம் ஆண்டுக்கான 'மாட்ரிட் ஓபன்' டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், முதல் நிலை வீரராங்கனையும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்குடன் மோதினார்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ஒசாகா, இரண்டாவது செட்டை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டியில், பெலிண்டாவின் அசத்தலான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 5-7 என்ற கணக்கில் ஒசாகா தோல்வியுற்றார். இதன் மூலம், ஒசாகா 6-3, 2-6, 5-7 என்ற கணக்கில் பெலிண்டாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.