கோவை மாவட்டத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனிஷ் - கீதா. தம்பதியினர் கோவை - திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்துவந்தனர். மேலும் அங்கேயே கூடாரம் அமைத்து வசித்தும் வந்துள்ளனர்
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வீட்டில் இருக்கும்போது டர்பன் ஆயில் தரையில் சிந்தியுள்ளது அது கீதாவின் உடையிலும் சிந்தியிருக்கிறது.
இது தெரியாமல் கீதா சமையல் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவரின் புடவையில் தீ பற்றியது.
அதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கீதாவின் உடல் நிலையில் சரியாகாமல் மோசமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 17) அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கீதாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.