ETV Bharat / briefs

மாணவர்களிடம் 6 மாதத்திற்கு கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது  - ஆம்ஆத்மி - AM Athmi demands

சென்னை: மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் கட்டணங்களை ஆறு மாதத்திற்கு மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என ஆம்ஆத்மி தமிழ்நாடு தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி வசீகரன்
ஆம்ஆத்மி வசீகரன்
author img

By

Published : Jun 24, 2020, 1:10 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள், அனைத்து நிறுவனங்களும் இயங்க முடியாமல் தடைபட்டு நிற்பது அறிந்ததே. இந்தக் கொடிய நோயிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மக்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மக்களின் எந்தத் தொழில்களும் முறையாக நடக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஏழை, நடுத்தர நிலையில் உள்ள மாணவர்கள் பலர் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் படித்துவருகிறார்கள். இதில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரி கட்டணங்களை கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

எனவே, அவர்களுக்கு பணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தக் கடினமான சூழ்நிலையில் கல்லூரிகள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் அவர்கள் கட்ட வேண்டிய கட்டண தொகைகளை கட்ட ஆறு மாதம் கால அவகாசம் கல்லூரி நிர்வாகங்கள் நீட்டித்து வழங்க வேண்டும்.

சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். கல்லூரிகள், செட்டிநாடு கல்லூரிகள், பல பிரதான கல்லூரிகள் மாணவர்களிடம் உடனடியாக ஜூன் மாதம் 25ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனால் பல பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி தடுமாறிவருகிறார்கள். ஆகவே கல்லூரிகளின் நிர்வாகங்கள் கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக கல்லூரி நிர்வாகங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசும் இந்த மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்லூரிகளின் நிர்வாகங்களுடன் பேசி கல்லூரி கட்டணம் செலுத்த கால நீட்டிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.