ETV Bharat / briefs

அணு உலையில் பணியாற்ற, போராட்டக்காரர்களுக்கு தடையில்லாச் சான்று! - இன்பதுரை கோரிக்கை - ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை

பழைய போராட்டத்தை காரணம் காட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்காமல் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடத்தில் கொடுத்த மனுவில் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.

ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை

author img

By

Published : Jul 3, 2020, 4:54 PM IST

திருநெல்வேலி: ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில, "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4ஆம் அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்ய கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் காவல் துறையிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.

அவ்வாறு தடையில்லா சான்று பெற அப்பகுதி தொழிலாளர்கள் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு செல்லும்போது, ஏற்கனவே அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தற்போது ஊரடங்கு காலத்தில் வாகனச் சோதனையின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது.

'கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம், செட்டிகுளம், விஜயாபதி, இறுக்கன்துறை உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் கூடங்குளம் அணு உலை வேலைகளில் ஒப்பந்த பணியாளர்களாக வேலைக்குச் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சிறிய வழக்குகளை கருத்திற்கொள்ளாமல், அவர்களுக்கு தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதன் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளில் அவர்கள் பணியாளர்களாக வேலைக்கு சேர முடியும்.

எனவே தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தற்போதுள்ள நடைமுறைகளை மாற்றி அதிலுள்ள சிக்கல்களைக் களைந்து கூடன்குளம் வட்டார மக்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கூடங்குளம் காவல்துறை ஆய்வாளருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிடவேண்டும்" என்று அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.