கரூர் மாவட்டம் கௌரிபுரம் அருகிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டார்.
மேலும் இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்பட பல முக்கிய கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.