ETV Bharat / briefs

பைக்கில் இருந்து கீழே விழுந்து வாரிய அஜித் பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டும்போது கீழே விழுந்து வாரியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Jun 25, 2020, 7:46 PM IST

ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்

கன்னடத்தில் வெளியான ’யூ டர்ன்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதையடுத்து தமிழில் விக்ரம் வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒரு பைக் ஓட்டும் காட்சி கூட இல்லை என்றால் இந்திய சினிமாவில் நீங்கள் ஒரு சிறந்த பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

நான் வெளியிட்டுள்ள வீடியோ ஜூன் 2017ஆம் ஆண்டு எடுத்தது. இயக்குநர் என்னிடம் உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா என்று கேட்டார். 'இல்லை' என நேரடியாக பதில் கூறினேன். பிறகு கற்றுக்கொள்கிறேன் எனக்கூறி அங்கிருந்த பைக்கை ஓட்டுவதற்காக எடுத்தேன்.

அப்போது கியரை எப்படி மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு தெரிந்திருந்தது. முதன்முறையாக பைக் ஓட்டுவது, மிகவும் கடினமாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டேன்

இதை என்னுடைய அசிஸ்டன்ட் பிரசாந்த், ரகசியமாக வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார். அனைவரும் நான் கீழே விழுந்ததும் உதவிசெய்ய ஓடி வந்தார்கள். ஆனால், அதைவிட பைக் ஸ்கிராட்ச் ஆவது பற்றித்தான் அதிகம் கவலை பட்டிருப்பார்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஏன் அதிகம் கனமாக இருக்கின்றன?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடிகர் அஜித்தின் தக்ஷா குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.