கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் மக்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் செய்திகள் மற்றும் தகவல்களை வைத்து மீம்ஸ்கள் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் சிலர் மீம்ஸ்களில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்த வேண்டாம் என்று விவேக் வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாடு முழுவதும் உள்ள அனைத்து மீம் கிரியேட்டர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், சிலர் கேலியாக அப்துல் கலாமின் புகைப்படத்தை உங்களின் மீம்களில் பயன்படுத்துகிறீர்கள். அதை தயவு செய்து கைவிட வேண்டும். நாம் அனைவரும் அவரை மதிக்க வேண்டும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டி" என்று பதிவிட்டுள்ளார்.