தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(50). போடி துரைராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான புளூமெட்டலில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த இவர், வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக குமரேசனின் மகன் விக்னேஷ் அளித்தப் புகாரில், தனது தந்தை குவாரியில் பணிபுரிந்து வந்த காலங்களில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாகவும், அதற்குப் பாதி தொகையை செலுத்தி விட்டதாகவும், மீதி பணத்தை கட்டச் சொல்லி தொடர்ந்து புளூ மெட்டல் நிறுவனத்தினர் வற்புறுத்தி வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.