கோவை மாவட்டம், சூலூர் அடுத்த குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அப்பகுதியில் குடோன் வைத்து வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை ராமசாமி தனது இருசக்கர வாகனத்தில் குடோனுக்கு சென்றுவிட்டு பணி முடிந்த பின்னர் வெளியே வந்துள்ளார்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதைக் கண்ட, அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றவர் அங்கு உள்ள நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் நண்பர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவரது பெயர் முரளி என்பதும் அவர் தற்போது வெள்ளகோவில் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கிராம மக்கள் வெள்ளக்கோவில் சென்று முரளி, அவருடன் இருந்த மற்ற நான்கு கூட்டாளிகளை பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் தொடர்ச்சியாக சூலூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், முரளியை தவிர மற்றவர்கள் 12 வயது முதல் 14 வயது உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் திருடப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு முரளியை மட்டும் காவல் துறையினர் கைது செய்து வாகன திருட்டு குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி!