தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் பெரிய தெரு பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இருந்து நேற்று இரவு ஒரு இளைஞர் வெளியில் வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அந்த இளைஞரை அழைத்தனர். இதைக் கண்டதும் அந்த இளைஞர் உடனடியாக அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் ஏடிஎம்மில் சென்று பார்த்தபோது ஏடிஎம்மில் கடப்பாரை ஒன்று கிடந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடப்பாரை மூலம் ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்று அது முடியாமல் போகவே அதை போட்டுவிட்டு அந்த இளைஞர் வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான காவலர்கள் அந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து அந்த இளைரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஏடிஎம்மை உடைக்க முயன்றது, திருவாரூர் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (20) என்ற இளைஞர் என்பதும் தற்போது சுண்ணாம்பு காரைத் தெருவில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க:பூட்டப் படாத வீடு... திருடனை விரட்டி பிடித்த வீட்டின் உரிமையாளர்