ETV Bharat / briefs

தொடர்கதையாகும் கரடி நடமாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள் - கூண்டில் சிக்கிய கரடி

தென்காசி: கடையம் வனச்சரகப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் அச்சத்தில் உள்ளனர்.

bear trapped in a forest area cage
bear trapped in a forest area cage
author img

By

Published : Jun 21, 2020, 2:20 PM IST

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விளைநிலங்களையும் வீட்டு விலங்குகளையும் தாக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.

அதேசமயம், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் உள்ள மா, பலா, தென்னை உள்ளிட்ட பயிர்களை மிகவும் சேதப்படுத்தி வந்தன. இதுகுறித்து வனத்துறைக்கு புகார் வந்ததையடுத்து பல்வேறு இடங்களில் கண்காணித்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர்.

இவற்றில் ஏப்ரல் 29 முதல் ஜூன் 16 வரை ஐந்து கரடிகள் சிக்கியுள்ளன. இந்நிலையில், மீண்டும் கடையம் வனச்சரக அலுவலக வளாகத்தில் வைக்கபட்ட கூண்டில் தற்போது கரடி சிக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தக் கரடியை முண்டந்துறை வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர். கடையம் பகுதியில் அடுத்தடுத்து 50 நாள்களில் ஆறு கரடிகள் பிடிபட்டிருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் அச்சத்தில் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.