திருப்பூர் மாவட்டத்தில், கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 30) புதிதாக 93 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 795 பேர் தொற்று பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.