ராமநாதபுரத்தில் ஜூலை10ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, ஆயிரத்து 691 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 985 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், 40 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை11), பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம் என மாவட்டம் முழுவதிலும் புதிதாக 70 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கிடையில், ராமநாதபுரம் மேலமடை பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 59வயதுடைய நபர் ஒருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு- 3 மணி நேரம் நீடித்த விசாரணை