ETV Bharat / briefs

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 12, 2020, 3:23 AM IST

திருவண்ணாமலை: ஒரே நாளில் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா உறுதி!
64 corona cases in thiruvannamalaj

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூலை10) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 860 ஆக இருந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூலை11) புதிதாக 64 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 629 ஆக உள்ளது.

இதில், சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து வந்த ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 26 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 10 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 11 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 14 பேர், முன் களப்பணியாளர்கள் இரண்டு பேர் என 64 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 553 பேர் டிஸ்சார்ஜ் - நம்பிக்கையூட்டும் மதுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.