ETV Bharat / briefs

நாகை குத்தாலத்தில் ஐந்து நாள்களுக்கு கடையடைப்பு

நாகை: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக குத்தாலத்தில் நாளை முதல் 5 நாள்களுக்கு கடையடைப்பு செய்வதாக வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

5 days shops Closed in nagai kuthalam
5 days shops Closed in nagai kuthalam
author img

By

Published : Jul 15, 2020, 1:17 AM IST

நாகை மாவட்டம் குத்தாலம் மெயின் ரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் வீடு திரும்பினார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அவர் உயிரிழந்தார்.

உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய இருந்த நிலையில் முதியவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.

முதியவரின் இறுதிச்சடங்கில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க குத்தாலம் பகுதியில் நாளை முதல் 5 நாள்களுக்கு முழு கடையடைப்பு செய்யப்போவதாக வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் அரியலூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.