ETV Bharat / briefs

வெறிநாய் கடித்து 39 பேர் காயம்! - Periyakulam Municipality

தேனி: பெரியகுளம் பகுதியில் வெறிநாய் கடித்து பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.

வெறிநாய்
rabies bite
author img

By

Published : Dec 10, 2020, 12:27 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இன்று (டிச.10) காலை முதல் தெருக்களில் நடந்து சென்றவர்களை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது.

தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், கீழவடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் செல்பவர்களை விரட்டி கடித்ததில் 8 பெண்கள், 2 குழந்தைகள், 29 ஆண்கள் என 39 பேர் காயமடைந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பெரியகுளம் பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.