இதுகுறித்து நிதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 9 ஆண்டு பிணையப் பத்திரம், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆண்டு பிணையப் பத்திரம் என மொத்தம் 2,000 கோடி ரூபாய் பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையிலுள்ள கோட்டை அலுவலகத்தில் ஜூன் 23ஆம் தேதி அன்று நடத்தப்படும். அதேசமயம் போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.