நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல் வயல் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொழிலில் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு பெய்த திடீர் கனமழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் முழுவதையும் மழை நீர் சூழ்ந்தது.
மேலும், மழையானது தொடர்ந்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், தற்போது பெய்த மழைநீர் வடிந்து மீண்டும் உற்பத்தியை தொடங்க 15 நாள் ஆகும் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல' - வேதனைப்படும் தென்னை விவசாயிகள்