ETV Bharat / briefs

பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை! - ஸ்லோவாக்கியா பள்ளி தாக்குதல்

ஸ்லோவேக்கியாவில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில்  கத்தியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை!

author img

By

Published : Jun 12, 2020, 2:21 AM IST

வடமேற்கு ஸ்லோவேக்கியாவின் வ்ரூட்கி நகரில் யுனைடெட் பள்ளி அமைந்துள்ளது. வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீடிரென கையில் கத்தியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டார். இந்தத் தாக்குதலில் உயர்நிலைப் பள்ளியின் துணை இயக்குநர் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் மார்ட்டின் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய அந்நாட்டின் அதிபர், சுசானா கபுடோவா, பள்ளியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மிகுந்த துக்கத்தை அளித்ததாகவும், இதில், உயிரிழந்த பள்ளி நிர்வாக அலுவலருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். இதற்கிடையே அந்த நபர் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.