ETV Bharat / breaking-news

திருச்சியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - ரூ.35 லட்சம்

Breaking News
author img

By

Published : Feb 23, 2019, 3:10 PM IST

2019-02-23 09:39:05

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்றிரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  திருச்சி வந்தது. அதில் பயணித்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது மலேசியாவைச் சேர்ந்த ஃபெலிஸியா தாஸ் விக்டர் என்ற பெண் 1,040 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஃபெலிஸியாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

Intro:திருச்சியில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயிலில் உள்ளது....

திருச்சி:
மலேசியாவில் இருந்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த பெண் கைது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளையும், உடமைகளையும் சோதனையிட்டனர்.
அப்போது மலேசியாவைச் சேர்ந்த பெலிஸியா தாஸ் விக்டர் என்ற பெண் தனது உடலில் மறைத்து 1,040 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

Conclusion:பிடிபட்ட பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.