ETV Bharat / state

உடனுக்குடன்: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

author img

By

Published : Dec 27, 2019, 7:10 AM IST

Updated : Dec 27, 2019, 7:37 PM IST

Local body
Local body

19:12 December 27

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. ஐந்து மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 27 மாவட்டங்களில் ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 

17:13 December 27

மதுரை மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. 

17:10 December 27

நான்கு மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 70.30 விழுக்காடு வாக்குகளும், கோவை மாவட்டத்தில் 62 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

16:44 December 27

மூன்று மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 57.50 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

16:44 December 27

மூன்று மணி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் 61.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

16:42 December 27

மூன்று மணி நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 51.31 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன

திருவண்ணாமலை - 39.89 விழுக்காடு 
கீழ்பெண்ணாத்தூர் - 53.98 விழுக்காடு
துரிஞ்சாபுரம் - 52.73 விழுக்காடு
தண்டராம்பட்டு - 41.15 விழுக்காடு
செய்யார்- 63.56 விழுக்காடு
அனக்காவூர் - 73.81 விழுக்காடு
வெம்பாக்கம் - 55.92 விழுக்காடு
தெள்ளார் - 36.34 விழுக்காடு
பெரணமல்லூர் - 67.60 விழுக்காடு

16:40 December 27

மூன்று மணி நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 49.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 

  • திருவலங்காடு - 62. 56 விழுக்காடு
  • ஆர்.கே. பேட்டை - 52 விழுக்காடு
  • பள்ளிப்பட்டு - 63.8 விழுக்காடு
  • திருத்தணி - 67.19 விழுக்காடு
  • திருவள்ளூர் - 26.29 விழுக்காடு 
  • பூண்டி - 48. 54 விழுக்காடு
  • கடம்பத்தூர் - 59.09 விழுக்காடு 
  • பூந்தமல்லி - 40.62 விழுக்காடு 

16:20 December 27

மூன்று மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம் முழுவதும் 52.39 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

  • தருமபுரி - 61.68 விழுக்காடு
  • நல்லம்பள்ளி - 45.42 விழுக்காடு
  • அரூர் - 45.48 விழுக்காடு
  • கடத்தூர்  - 62.24 விழுக்காடு
  • பாப்பிரெட்டிப்பட்டி - 52.46 விழுக்காடு

16:10 December 27

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 476 வாக்குச்சாவடி மையங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மூன்று மணி நிலவரப்படி மாவட்டத்தில் 50.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

15:41 December 27

ஒரு மணி நிலவர வாக்குப் பதிவு விவரம்: 

  • கடலூர் - 43.81 விழுக்காடு
  • திண்டுக்கல் - 43.24 விழுக்காடு
  • தேனி - 50.02 விழுக்காடு

15:38 December 27

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதலாவது கட்ட வாக்குப்பதிவின் ஒரு மணி நிலவரப்படி 45.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 55.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • மதுரை கிழக்கு - 44.36 விழுக்காடு
  •  மதுரை மேற்கு - 45.45 விழுக்காடு
  • மேலூர் - 44.94 விழுக்காடு
  • கொட்டாம்பட்டி - 40.92 விழுக்காடு
  • அலங்காநல்லூர் - 55.35 விழுக்காடு
  • வாடிப்பட்டி - 47.77 விழுக்காடு

15:06 December 27

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 42.47% வாக்குப் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

14:25 December 27

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி. தமிழ்நாடு தேர்தல் அலுவலர்களும், அரசு அலுவலர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது எனத் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். ஜனநாயக முறையிலும், நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும், முறைகேடுகள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

14:14 December 27

ஒரு மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 39.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

  • தூத்துக்குடி - 35.84 விழுக்காடு
  • கருங்குளம்  - 35.17 விழுக்காடு
  • ஆழ்வார்திருநகரி - 39.22 விழுக்காடு
  • திருவைகுண்டம் - 46.94 விழுக்காடு
  • உடன்குடி - 35.67 விழுக்காடு
  • திருச்செந்தூர் - 39.59 விழுக்காடு
  • சாத்தான்குளம் - 43.84 விழுக்காடு

13:59 December 27

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி 41.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

13:52 December 27

ஒரு மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் 50 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.

  • கபிலர்மலை - 53 விழுக்காடு
  • கொல்லிமலை - 53 விழுக்காடு
  • மல்லசமுத்திரம் - 58 விழுக்காடு
  • நாமகிரிப்பேட்டை - 49 விழுக்காடு
  • பள்ளிபாளையம் - 44 விழுக்காடு
  • ராசிபுரம் - 51 விழுக்காடு
  • திருச்செங்கோடு - 48 விழுக்காடு
  • வெண்ணந்தூர் - 57 விழுக்காடு

13:47 December 27

ஒரு மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம் முழுவதும் 35.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 

  • தருமபுரி - 39.95 விழுக்காடு
  • நல்லம்பள்ளி - 27.94 விழுக்காடு
  • அரூர் - 37.2 விழுக்காடு
  • கடத்தூர் - 46.27 விழுக்காடு
  • பாப்பிரெட்டி பட்டி - 33.25 விழுக்காடு

07:07 December 27

1:05 PM

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாவரி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அரசியல் கட்சி பிரமுகர் வாக்காளர்களை அழைத்து வந்து அவர் கண்முன்னரே வாக்குகளை பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடியிலேயே தேர்தல் விதிமுறை மீறப்பட்டுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12:50 PM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாக்குளம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாயாக்குளம் மற்றும் புது மாயாக்குளம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள தெருப் பெயர் வாக்காளர் ஒப்புகை சீட்டில் தவறாக அச்சிடப்பட்டு வந்ததால் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  புது மாயாக்குளம் கிராமத்தில் 730  வாக்காளர்கள் உள்ள நிலையில் மத்தியம் 12 மணிவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மாயாக்குளம் கிராமத்தில் மொத்தம் 951 வாக்குகள் உள்ளநிலையில் 12 மணிவரை நான்கு நபர்கள் மட்டும் வாக்கை செலுத்தியுள்ளனர். அரசு அலுவலர்கள் மக்களுடன் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர்.   

12:45 PM

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கினை பதிவு செய்துள்ளார். குடும்பத்துடன் வாக்களிக்க வந்த எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

12:30 PM

நாகை மாவட்டம் தெத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில், அதிமுகவினர் அத்துமீறி பரப்புரை செய்ததாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கைகலப்பு ஏற்பட்டது.  

12:15 PM

'வாக்குப்பெட்டி வைக்கும் இடங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், வாக்குப் பெட்டி வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்' என உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - திமுக திடீர் வழக்கு!

12:00 PM

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கட்டதார அள்ளி பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெங்கட்டதார அள்ளியை தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

11:45 AM

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்பட்டி கிராமத்தில், ஊராக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற சேகர் (46) என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி தேர்தல் பணியாளர்கள் வாக்களிக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சேகர் என்ற மற்றொரு நபரின் பெயருடன் ஏற்பட்ட குழப்பத்தால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

11:30 AM

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக வேட்பாளர் உமா இன்று காலை வாகன விபத்தில் சிக்கினார். பலத்தக் காயங்களுடன் அவர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

11:15 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சியில்  சின்னபாப்பா என்ற மூதாட்டியை அவரது பேரன் முனியப்பன் தோளில் சுமந்துவந்து வாக்களிக்க வைத்தார். அப்பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சின்னபாப்பா தள்ளாத வயதிலும் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

11:00 AM

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் வாக்குப்பதிவு மையத்தை திடீரென பூட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பரப்புரை செய்ததாகக் கூறி கிருஷ்ணன் இச்செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

10:45 AM

சென்னையில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

  • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வந்த புகாரின் அடிப்படையில் இதுவரை 112 எஃப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. 
  • இதுவரை ரொக்கமாக 53 லட்சத்து 16 ஆயிரத்து 290 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 9 மணிநிலவரத்தின்படி 27 மாவட்டங்களில் சராசரியாக 10.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாளவாடியில் ஆர்வத்துடன் வாக்களித்த மலைவாழ் மக்கள்

10: 25 AM

பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டி பகுதி அதிமுக வேட்பாளர் கல்யாணியின் கணவர் காளிங்கராஜ், திமுக வேட்பாளர் பூங்கொடியின் கணவர் முத்துசாமி ஆகிய இருவருக்கும் இடையே வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் முத்துச்சாமி, காளிங்கராஜை தாக்கியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

10: 05 AM

அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்டம் தாமரை குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் வாக்களித்தார்.

இதையும் படிங்க: விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

10:00 AM

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காததால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன்காரணமாக, வெளியூரில் பணிபுரியும் வாக்காளர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "விடுமுறை இல்லாதது வாக்களிக்க தடையாக இருக்கிறது"

9:45 AM

ஊராட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் உள்ள பதவியிடங்கள் நிலவரம்

  • மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி - 260
  • ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி - 2,546
  • ஊராட்சி தலைவர் பதவி - 4,700
  • வார்டு உறுப்பினர் பதவி - 37,830

9:30 AM

முதல் வாக்காளர் பெருமிதம் புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மணிகண்டன் என்பவர் தனது முதல் வாக்கினை செலுத்தினார்.

முதன்முறையாக ஜனநாயக கடமையை ஆற்றி இருப்பது பெருமையாக இருக்கிறது எனவும் நல்லத் தலைவரை தேர்வு செய்ய நேர்மையான முறையில் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

9:00 AM

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பூலாவரி கிராமப்பகுதியில் சின்ன பிள்ளை என்ற 100 வயதைக் கடந்த பாட்டி வாக்களித்தார். தள்ளாத வயதிலும் சின்னப்பிள்ளை ஜனநாயகக் கடமையாற்றயதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

இதையும் படிங்க: 100 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி!

8:50 AM

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தின் அருகாமையில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை கிழித்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனை கண்ட அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நாகை வாக்குச்சாவடியில் அதிமுகவினர் வாக்குவாதம்!

8:30 AM 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை. ஊரக உள்ளாட்சிக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவரும் நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை.

8: 15 AM 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்களித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள வேளூரில் தனது வாக்கினை பதிவுசெய்தார். தேர்தலில் திமுக சிறப்பான வெற்றிபெறும், மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என முத்தரசன் பேட்டி.

இதையும் படிங்க: ‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள் - முத்தரசன் பேட்டி’

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மண்மங்கலம் ஊராட்சியில் உள்ள ராமேஸ்வரப்பட்டி அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.

8:00 AM

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: மதுரை ஒத்தக்கடையில் சலசலப்பு

7:45 AM

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் அரசுப் பள்ளியில் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.30 கோடி பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், சோதனை முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்திலுள்ள 144 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் தொகுதி மறுவரைவுக்குப்பின் நடைபெறும்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: முதன் முறையாகப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

7:30 AM 

முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறும் நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவானது வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்பின் நான்கு பதவியிடங்களுக்காக நான்கு நிறத்திலான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

  • இளஞ்சிவப்பு - ஊராட்சித் தலைவர்
  • மஞ்சள் - மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
  • வெள்ளை - கிராம ஊராட்சி உறுப்பினர்
  • பச்சை - ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்

7:20 AM 

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

7:05 AM

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 27 மாவட்டங்களிலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 7 மணியளவில் தொடங்கியது. முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Intro:Body:

local body polls live

Conclusion:
Last Updated : Dec 27, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.